உற்பத்தி அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி


உற்பத்தி அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி
x

பாப்பிரெட்டிப்பட்டி பகுதியில் உற்பத்தி அதிகரிப்பால் தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்தது.

தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரத்தில் அலமேலுபுரம், மோளையானூர், கர்த்தானூர், ராமியம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தென்னந்தோப்புகள் அதிக அளவில் உள்ளன. கடந்த ஓராண்டாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், தேங்காய் உற்பத்தி வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. கமிஷன் மண்டிகள் மூலம் நேரடியாக தோட்டங்களிலேயே தேங்காய்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. பின்னர் தொழிலாளர்களால் மட்டைகள் உரிக்கப்பட்டு மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு லாரிகளில் அனுப்பி வைக்கப்படுகிறது. உற்பத்தி அதிகாிப்பால் தேங்காய் விலை தற்போது வீழ்ச்சி அடைந்துள்ளது. ஒரு தேங்காய் ரூ.8-க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந் துள்ளனர்.


Next Story