தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி


தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலி
x

வடமதுரை அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்து விவசாயி பலியானார். தாத்தாவின் இறுதிச்சடங்குக்கு தென்னம்பாலை வெட்டியபோது உயிரிழந்தது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கோம்பையன்பட்டியை சேர்ந்தவர் ஜான்கென்னடி (வயது 22). விவசாயி. இவரது தாத்தா தாமஸ். வயது முதிர்வு காரணமாக தாமஸ் நேற்று முன்தினம் இறந்து விட்டார். இதையொட்டி அவருக்கு நேற்று இறுதிச்சடங்கு நடந்தது.

அப்போது இறுதிச்சடங்கில் வைப்பதற்காக, தென்னம்பாலை வெட்டுவதற்கு பெரியக்கோட்டை பகுதியில் உள்ள தென்னைமரத்தில் ஜான்கென்னடி ஏறினார். அப்போது திடீரென அவர், தென்னை மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த ஜான்கென்னடியை, அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே ஜான்கென்னடி பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து ஜான்கென்னடியின் அண்ணன் வினோத் மார்ட்டின், வடமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story