கிணற்றில் தவறி விழந்து தொழிலாளி பலி
கிணற்றில் தவறி விழந்து தொழிலாளி பலியானார்.
கிருஷ்ணராயபுரம்,
லாலாபேட்டை அருகே உள்ள ேமலதாளியம் பட்டியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 49). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி 2 மகள்கள் உள்ளனர். இந்தநிலையில் சம்பவத்தன்று அப்பகுதியில் உள்ள கிணற்றின் தடுப்பு கட்டையில் உட்கார்ந்திருந்தார். அப்போது திடீரென நிலைதடுமாறி தவறி கிணற்றுக்குள் விழுந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த முசிறி தீயணைப்பு படைவீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அதற்குள் மூச்சி திணறி முருகேசன் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து தீயணைப்பு படைவீரர்கள் கிணற்றில் இறங்கி முருகேசன் உடலை மீட்டு மேலே கொண்டு வந்தனர். பின்னர் லாலாபேட்டை போலீசார் முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து முருகேசனின் தம்பி பாலசுப்பிரமணி கொடுத்த புகாரின்பேரில், லாலாபேட்டை போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.