தவறி விழுந்த கொத்தனார் சாவு


தவறி விழுந்த கொத்தனார் சாவு
x

தவறி விழுந்த கொத்தனார் சாவு

கன்னியாகுமரி

அழகியபாண்டியபுரம்:

குலசேகரம் அருகே உள்ள பொன்மனை பகுதியை சேர்ந்தவர் ரெதீஷ் குமார் (வயது 40), கொத்தனாரான இவருக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் இவர் மனைவியை விட்டு பிரிந்து அவரது தங்கை வீடு உள்ள பொன்மனை பகுதியில் வசித்து வந்தார்.

இந்தநிலையில் கடந்த மாதம் 17-ந் தேதி அருவநல்லூர் பகுதியில் உள்ள செக்கடி என்ற இடத்தில் கட்டிட பணியின் போது ரெதீஷ்குமார் தவறி விழுந்து காயமடைந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. நேற்று முன்தினம் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இதுகுறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story