விழுந்து கிடக்கும் மின்கம்பங்களை அகற்ற வேண்டும்
விழுந்து கிடக்கும் மின்கம்பங்களை அகற்ற வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை மாவட்டம் கலவைைய அடுத்த அகரம் சாலையில் ஒரு வாரத்துக்கு முன்பு பலத்த மழையால் 7 மின்கம்பங்கள் சாய்ந்தன. அதில் ஒரு மின் கம்பம் விவசாய நிலத்தில் விழுந்து கிடக்கிறது. தகவல் அறிந்த மின்துறையினர் மின் வினியோகத்தைத் துண்டித்து விட்டனர். அன்று முதல் இன்று வரை சாய்ந்து கிடக்கும் மின்கம்பங்களை சரி செய்ய யாரும் வரவில்லை. மின்வாரியத்துறையினர் விரைந்து செயல்பட்டு கீேழ விழுந்து கிடக்கும் மின்கம்பங்களை அகற்றி விட்டு புதிய மின் கம்பங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story