2 வது நாளாக பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு


2 வது நாளாக பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த சாரல் மழையால் 2-வது நாளாக பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

திருப்பூர்


மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் பெய்த சாரல் மழையால் 2-வது நாளாக பஞ்சலிங்க அருவிக்கு நீர்வரத்து அதிகரித்தது.

உடுமலையை அடுத்த திருமூர்த்திமலையில் பஞ்சலிங்க அருவி உள்ளது. உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள இந்த அருவிக்கு வனப்பகுதியில் உற்பத்தியாகின்ற ஆறுகள், ஓடைகள் நீராதாரமாக உள்ளது. வனப்பகுதியில் மழைப்பொழிவு ஏற்படும் போது பல்வேறு பகுதியில் ஓடிவருகின்ற ஆறுகள் பஞ்சலிங்கங்களுக்கு அருகில் ஒன்று சேர்ந்து அருவியாக கொட்டுகிறது. அருவியில் விழுகின்ற தண்ணீரில் குளித்து புத்துணர்வு பெறுவதற்காக வெளிமாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் நாள்தோறும் திருமூர்த்திமலைக்கு வருகை தருகின்றனர்.

இந்த சூழலில் நேற்று மதியம் அருவியின் நீராதாரங்களில் திடீரென சாரல் மழை பெய்தது. அதைத்தொடர்ந்து சுற்றுலா பயணிகள் அருவிக்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டது. நேற்று மற்றும் நேற்றுமுன் தினமும் பெய்த மழையால் அருவிக்கு சற்று நீர்வரத்து அதிகரித்து உள்ளது. நேற்று மதியம் பெய்த மழையால் ஏற்பட்ட நீர்வரத்து மலையடிவாரத்தை அடைந்தது.

தண்ணீர் மும்மூர்த்திகள் எழுந்தருளி உள்ள குன்றின் பின்புறமாக அணையை அடைந்தது. வனப்பகுதியில் மழை பெய்ததன் காரணமாக மதியம் 3 மணியளவில் சுற்றுலா பயணிகள் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. அருவிக்கு நீர்வரத்து ஏற்பட்டதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.


Related Tags :
Next Story