வெள்ளி பொருட்களை திருடியதாக பொய் புகார்போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தம்பதி மனு


வெள்ளி பொருட்களை திருடியதாக பொய் புகார்போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தம்பதி மனு
x
தினத்தந்தி 25 April 2023 12:15 AM IST (Updated: 25 April 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

பூதப்பாண்டி அருகே வெள்ளி பொருட்களை திருடியதாக பொய் புகார் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தம்பதி மனு

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

பூதப்பாண்டி அருகே உள்ள சிறமடம் பகுதியைச் சேர்ந்தவர் குமரேசன் என்ற மணி (வயது 38), பெயிண்டர். இவர் நேற்று தனது மனைவி மற்றும் குழந்தையுடன் நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்து ஒரு மனு அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

நான் வாடகை வீட்டில் வசித்து வருகிறேன். கடந்த மார்ச் மாதம் எங்கள் ஊரில் உள்ள ஒரு வீட்டிற்கு பெயிண்ட் அடிக்க சென்றேன். பின்னர் பிரச்சினை ஏற்பட்டு வேலைக்கு செல்லவில்லை. அப்போது பெயிண்ட் அடிக்கும் பணிக்கு தேவையான எனக்கு சொந்தமான பொருட்களை அங்கு இருந்து எடுத்து வந்து விட்டேன்.

இந்த நிலையில் திடீரென அந்த வீட்டின் உரிமையாளர் தனது வீட்டில் உள்ள சில்வர் பாத்திரங்களை காணவில்லை என்று கூறினார். மேலும் சில நாட்கள் கழித்து வெள்ளி பொருட்களை காணவில்லை என்று தெரிவித்தார். அதை நான் தான் எடுத்துச் சென்றதாக கூறியுள்ளார். தற்போது அவருடைய உறவினர்கள் எனது குடும்பத்தை மிரட்டி வருகிறார்கள். மேலும் பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் என் மீது பொய் புகார் அளித்துள்ளனர். என் மீது தேவையின்றி திருட்டு பழி சுமத்தி போலீசில் சிக்க வைக்க பார்க்கிறார்கள். எனவே என்னையும், என் குடும்பத்தையும் அச்சுறுத்தும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

-------


Next Story