குலசேகரன்பட்டினம் அருகே குடும்ப தகராறு: மகளுடன் பெற்றோர் விஷம் குடித்தனர்


குலசேகரன்பட்டினம் அருகே குடும்ப தகராறு:  மகளுடன் பெற்றோர் விஷம் குடித்தனர்
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

குலசேகரன்பட்டினம் அருகே குடும்ப தகராறு காரணமாக மகளுடன் பெற்றோர் விஷம் குடித்தனர். மூன்று பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தூத்துக்குடி

குலசேகரன்பட்டினம்:

குலசேகரன்பட்டினம் அருகே குடும்ப தகராறு காரணமாக மகளுடன் பெற்றோர் விஷம் குடித்தனர். அவர்களுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

குடும்ப தகராறு

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் அருகே உள்ள சிறுநாடார் குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 55). இவரது மனைவி சத்தியவாணி (50), மகள் சந்தியா (27). இவர்கள் சென்னை போரூரில் வசித்து வருகிறார்கள்.கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு சென்னையைச் சேர்ந்த ஹரிகரசுதன் என்பவருக்கும், சந்தியாவுக்கும் திருமணம் நடந்தது. பின்னர் கணவன்-மனைவி சிறுநாடார் குடியிருப்பில் வசித்து வந்தனர். ஹரிகரசுதன் உடன்குடி அனல் மின்நிலையத்தில் பணியில் ஈடுபட்டு உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். ஹரிகரசுதனுக்கும், சந்தியாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.

விஷம் குடித்தனர்

சம்பவத்தன்று ஹரிகரசுதன், சந்தியாவிடம் தகராறு செய்துவிட்டு சென்னைக்கு சென்றுவிட்டார். இதுகுறித்து சந்தியா தனது பெற்றோரிடம் தெரிவித்தார்.

அவர்கள் சென்னையில் இருந்து சிறுநாடார் குடியிருப்புக்கு வந்தனர். பெற்றோரிடம் சந்தியா நடந்த விவரத்ைத கூறினார். இதையடுத்து 3 பேரும் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாக கூறப்படுகிறது. விவசாயத்திற்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) 3 பாட்டில்கள் வாங்கி வந்து நேற்று முன்தினம் இரவில் 3 பேரும் குடித்தனர்.

உறவினர்களுக்கு தகவல்

இதுகுறித்து சந்தியா ெசல்போன் மூலம் நெல்லையில் உள்ள தங்களின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக சிறுநாடார் குடியிருப்பு பகுதியில் உள்ள தங்களுக்கு தெரிந்தவர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்கள் ரகுபதி வீட்டிற்கு விரைந்து சென்றனர். அங்கு மயக்கத்தில் இருந்த ரகுபதி, சத்தியவாணி, சந்தியா ஆகிய 3 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருச்செந்தூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து குலசேகரன்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story