பிரபல டைரக்டர் ஷண்முகப் பிரியன் மரணம்


பிரபல டைரக்டர் ஷண்முகப் பிரியன் மரணம்
x

பிரபல சினிமா டைரக்டர் ஷண்முகப் பிரியன் உடல்நலக்குறைவால் சென்னை கெருகம்பாக்கத்தில் நேற்று மரணம் அடைந்தார்.

சென்னை,

பிரபல சினிமா டைரக்டர் ஷண்முகப் பிரியன் உடல்நலக்குறைவால் சென்னை கெருகம்பாக்கத்தில் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 71.

ஷண்முகப் பிரியன் பல சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள். நாடகங்கள் எழுதி உள்ளார். இவர் எழுதிய விளிம்பு என்ற நாடகத்தை 'உறவாடும் நெஞ்சம்' என்ற பெயரில் திரைப்படமாக எடுத்தார். 1976-ல் வெளியான இந்த படத்தில் சிவகுமார் கதாநாயகனாக நடித்து இருந்தார். இதில் நடித்ததற்காக சிவகுமாருக்கு சிறந்த நடிகருக்கான தமிழக அரசு விருது கிடைத்தது.

ஷண்முகப் பிரியன் கதை, வசனம் இயக்கத்தில் முதலில் வெளிவந்த 'ஒருவர் வாழும் ஆலயம்' 1980-களில் வெளியான சிறந்த படங்களில் ஒன்றாக விளங்கியது.

பாட்டுக்கு நான் அடிமை, மதுரை வீரன் எங்கசாமி, உதவும் கரங்கள் உள்ளிட்ட படங்களையும் இயக்கி உள்ளார். வெற்றிவிழா, பிரம்மா, ஆத்மா உள்பட 50-க்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதி உள்ளார்.


Next Story