மதுரை மாட்டுத்தாவணி அருகே பிரபல ரவுடி வெட்டிக்கொலை


மதுரை மாட்டுத்தாவணி அருகே  பிரபல ரவுடி வெட்டிக்கொலை
x

மதுரையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

மதுரை


மதுரையில் பிரபல ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

ரவுடி வெட்டிக்கொலை

மதுரை மாட்டுத்தாவணி அடுத்த உலகனேரி பகுதியை சேர்ந்த பாலமுருகன் என்ற டோரா பாலா(வயது 30). இவர் தற்போது செல்லூர் பகுதியில் வசித்து வந்தார். ரவுடி பட்டியலில் உள்ள இவர் மீது கொலை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்த நிலையில் மதுரை உத்தங்குடி அடுத்த வளர்நகர், ராஜீவ் காந்தி நகரில் ஆட்கள் நடமாட்டம் இல்லாத காட்டு பகுதியில் ரவுடி பாலமுருகன் நண்பர்களுடன் மது அருந்திகொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம கும்பல் ஒன்று பாலமுருகனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்து விட்டு தப்பிவிட்டது.

இந்த நிலையில் அந்த வழியாக சென்றவர்கள் ரத்த வெள்ளத்தில் ஒருவர் வெட்டு காயத்துடன் இறந்து கிடப்பதாக மாட்டுத்தாவணி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

போலீசார் விசாரணை

உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துசென்று இறந்து கிடந்த பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் முன்விரோதம் காரணமாக கொலை சம்பவம் நடைபெற்றதாக தெரியவந்துள்ளது. இதனிடையே அந்த பகுதியில் தெருக்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரையில் ஆள்நடமாட்டம் இல்லாத காட்டுப்பகுதியில் ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


Next Story