பண்ணை பள்ளி பயிற்சி
எஸ்.புதூர் அருகே சின்னாரம்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு பயறு வகைகளில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றிய பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது.
எஸ்.புதூர்
மாநில விரிவாக்க திட்டங்களுக்கான உறுதுணை சீரமைப்பு திட்டம் மற்றும் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் எஸ்.புதூர் அருகே சின்னாரம்பட்டி கிராமத்தில் விவசாயிகளுக்கு பயறு வகைகளில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பற்றிய பண்ணை பள்ளி பயிற்சி நடைபெற்றது. எஸ்.புதூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் அம்சவேணி தலைமை தாங்கினார். உழவர் பயிற்சி நிலைய துணை வேளாண்மை இயக்குனர் கதிரேசன் முன்னிலை வகித்தார்.
இந்த முகாமில் பயறு வகை பயிர்களில் உள்ள தொழில்நுட்பங்களை துணை வேளாண்மை அலுவலர் பாலமுருகன் எடுத்து கூறினார். களை, இயற்கை உரம், சாகுபடி செய்யும் முறைகள் மற்றும் அதன் பயன்கள் குறித்து செயல்விளக்கங்கள் செய்து காண்பித்தனர். விதை நேர்த்தி செய்முறை பற்றி இயற்கை விவசாயி சிவராமன் செய்து காண்பித்தார். தொடர்ந்து இடுபொருட்கள் இலவசமாக வழங்கப்பட்டது. பயிற்சி ஏற்பாடுகளை அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் ஸ்ரீரங்க செல்வி செய்திருந்தார். முடிவில் உதவி தொழில்நுட்ப மேலாளர் விஜய் ஆனந்த் நன்றி கூறினார்.