தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்த விவசாயி போலீசார் விசாரணை
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு தீக்குளிக்க பெட்ரோலுடன் வந்த விவசாயியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த நிலையில் கலெக்டர் அலுவலக போர்டிகோ அருகே நின்ற ஒருவர் கைபையில் பாட்டில் பெட்ரோல் நிரப்பி மறைத்து வைத்து எடுத்து வந்திருப்பது தெரியவந்தது. அதை அந்த பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் பறிமுதல் செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில் அவர் பாலக்கோடு பகுதியை சேர்ந்த விவசாயி செல்வம் என்பதும் உறவினர்களிடையே ஏற்பட்ட நிலப்பிரச்சினை தொடர்பாக நடவடிக்கை கோரி தீக்குளிக்க பாட்டிலில் பெட்ரோலை மறைத்து வைத்து எடுத்து வந்ததும் தெரியவந்தது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story