அண்ணன் மனைவியை தாக்கிய விவசாயி கைது
ஆழ்வார்திருநகரி அருகே அண்ணன் மனைவியை தாக்கிய விவசாயியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி
தென்திருப்பேரை:
ஆழ்வார்திருநகரி அருகே திருக்களூர் பகுதியை சேர்ந்த சாமி என்பவரது மகன் ஆவுடையப்பன் (வயது 65). அவரது தம்பி சங்கரநயினார் (64). இருவரும் விவசாயிகள். இவர்களுக்கு இடையே இடப்பிரச்சினை காரணமாக அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று ஆவுடையப்பன் தனது வீட்டின் முன்பு மனைவியுடன் நின்று கொண்டிருந்துள்ளார். அங்கு மதுபோதையில் வந்த சங்கரநயினார் ஆவுடையப்பனுடன் தகராறு ெசய்ததுடன், அவரது மனைவியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து ஆவுடையப்பன் அளித்த புகாரின் பேரில் ஆழ்வார்திருநகரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வம் வழக்குப்பதிவு செய்து சங்கரநயினாரை கைது செய்தார்.
Related Tags :
Next Story