(செய்தி சிதறல்) லால்குடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய விவசாயி கைது


(செய்தி சிதறல்) லால்குடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய விவசாயி கைது
x

லால்குடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய விவசாயி கைது செய்யப்பட்டார்.

திருச்சி

லால்குடி அருகே கள்ளச்சாராயம் காய்ச்சிய விவசாயி கைது செய்யப்பட்டார்.

கள்ளச்சாராயம்

லால்குடி அருகே பெரியவர்சீலி கிராமத்தை சேர்ந்தவர் அமிர்தம். இவரது மகன் அந்தோணி டேவிட் (வயது 40). விவசாயியான இவரது வயலின் பின்பகுதியில் உள்ள மூங்கில் தோப்பில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதாக புகார் வந்தது.

இதனையடுத்து திருவெறும்பூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று சாராயம் காய்ச்சிய அந்தோணி டேவிட்டை கைது செய்தனர்.

மேலும் விற்பனைக்காக வைத்திருந்த 7 லிட்டர் கள்ள சாராயத்தினையும், 110 லிட்டர் ஊறலையும் பறிமுதல் செய்துஅழித்தனர்.

கஞ்சா விற்றவர்கள் கைது

*திருச்சி விமானநிலைய பகுதியில் உள்ள குளக்கரையில் கஞ்சா விற்றதாக செம்பட்டு பகுதியை சேர்ந்த செந்தில்குமார் (45) என்பவரை விமானநிலைய போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 150 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

*திருச்சி எடமலைப்பட்டி புதூர் மாநகராட்சி பூங்கா பகுதியில் கஞ்சா விற்றதாக இந்திராநகர் பகுதியைச் சேர்ந்த நந்தகுமார் (23) என்பவரை எடமலைப்பட்டிபுதூர் போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 1 கிலோ 300 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர்.

கொலை மிரட்டல்

*சோமரசம்பேட்டை அருகே உள்ள கோப்பு பாலக்காட்டம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் தினேஷ்குமார் (21). இவர் 17 வயது சிறுமியை கேலி செய்துள்ளார். இதனை தட்டி கேட்ட தாயாரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் சோமரசம்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தினேஷ்குமாரை கைது செய்தனர்.

முதியவர் பிணம்

* மண்ணச்சநல்லூர் அருகே வயல் பகுதியில் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என ெகாள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொழிலாளி மயங்கி விழுந்து சாவு

*திருச்சி பாலக்கரை பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (37). கூலித்தொழிலாளியான இவர் மணல்வாரித்துறை டாஸ்மாக் கடை அருகே மயங்கி விழுந்தார். இதையடுத்து அருகில் உள்ளவர்கள் பழனிசாமியை திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்து பார்த்த டாக்டர் பழனிசாமி இறந்து விட்டதாக கூறினார். இந்த சம்பவம் குறித்து பாலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மிரட்டல் விடுத்தவர் கைது

* திருச்சி குழுமணி அண்ணா நகரை சேர்ந்தவர் அஜித் குமார் (22). இவர் தனது நண்பர்களுடன் குழுமணி ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது, வடக்கு மூலங்குடியைச் சேர்ந்த ஏழுமலை (27) என்பவர் அஜித்குமார் ஒட்டி வந்த மோட்டார் சைக்கிளில் இடிக்குமாறு சென்றுள்ளார். இதை தட்டி கேட்ட அஜித்குமாரை ஏழுமலை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்தாராம். இது குறித்து ஜீயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஏழுமலையை கைது செய்தனர்.


Next Story