தம்பியை அரிவாளால் வெட்டிய விவசாயி கைது


தம்பியை அரிவாளால் வெட்டிய விவசாயி கைது
x

தம்பியை அரிவாளால் வெட்டிய விவசாயி கைது

ஈரோடு

அந்தியூர்

அந்தியூர் அருகே உள்ள பர்கூர் மலைப்பகுதி துருசலாம்பாளையத்தை சேர்ந்தவர் பொம்மன் (வயது 53). விவசாயி. இவருடைய தம்பி புட்டன் (38). இருவருக்கும் பொதுவான நிலம் உள்ளது. புட்டன் புதிதாக வீடு கட்டி வருகிறார். இதற்காக பொதுவான நிலத்தில் இருந்து புட்டன் மண் எடுத்துள்ளார். அப்போது பொம்மன், இருவருக்கும் பொதுவான நிலத்தில் இருந்து நீ எப்படி மண் எடுக்கலாம்? என்று புட்டனை பொம்மன் கம்பால் தாக்கி, அரிவாளால் வெட்டியதாக கூறுப்படுகிறது. இதையடுத்து புட்டன் அந்தியூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பொம்மனை கைது செய்தனர்.


Next Story