சேத்தியாத்தோப்பு அருகே மூதாட்டியை கொன்ற விவசாயி கைது


சேத்தியாத்தோப்பு அருகே மூதாட்டியை கொன்ற விவசாயி கைது
x

சேத்தியாத்தோப்பு அருகே மூதாட்டியை கொன்ற விவசாயி கைது செய்யப்பட்டாா்.

கடலூர்

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அடுத்த நந்தீஸ்வரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் குணசேகரன். இவருடைய மனைவி அழகுராணி(வயது 60). சம்பவத்தன்று இவர் வீட்டில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவரை யாரோ அடித்து கொலை செய்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சோழத்தரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த ராமானுஜம் மகன் விவசாயி சேகர்(41) என்பவரும், குணசேகரனும் அடிக்கடி மது குடித்து வந்துள்ளனர். இதை அழகுராணி கண்டித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சேகர், அழகுராணியை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து சேகரை பிடித்து போலீசார் விசாரித்தனர். அதில் தான், அழகுராணியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து சேகரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story