போக்சோ சட்டத்தில் விவசாயி கைது
மாணவியிடம் தகாத முறையில் பேச்சு போக்சோ சட்டத்தில் விவசாயி கைது செய்யப்பட்டார்
மயிலாடுதுறை
மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் சாலையை சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது50). விவசாயியான இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் கடந்த 4 ஆண்டுகளாக தொடர்பு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 3 மாதத்திற்கு முன்பு அந்த பெண், ஸ்ரீதரிடம் பேசுவதை தவிர்த்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஸ்ரீதர் அந்த பெண்ணின் மகளான கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வரும் 17 வயது மாணவி பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்து இருந்தபோது அங்கு வந்து அந்த மாணவியிடம் தகாத முறையில் பேசி அவமானப்படுத்தியுள்ளார். இது குறித்து அந்த மாணவி மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) விசித்திராமேரி மற்றும் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஸ்ரீதரை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story