விவசாயி மண்வெட்டியால் அடித்துக் கொலை


விவசாயி மண்வெட்டியால் அடித்துக் கொலை
x

வள்ளியூர் அருகே வயலில் தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரை தாக்கிய தம்பியும் படுகாயம் அடைந்தார்.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் அருகே வயலில் தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி மண்வெட்டியால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். அவரை தாக்கிய தம்பியும் படுகாயம் அடைந்தார்.

விவசாயி

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள வடக்கு ஆச்சியூர் கிராமத்தை சேர்ந்தவர் கந்தையா. இவருைடய மகன்கள் நம்பிராஜன் (வயது 50), ஆறுமுகவேல் (45) மற்றும் சுப்பையா. விவசாயிகளான இவர்களுக்கு சொந்தமாக அந்த பகுதியில் பம்புசெட் கிணற்றுடன் விவசாய நிலம் உள்ளது. அங்கு பருத்தி, சோளம் மற்றும் நெல் ஆகியவற்றை பயிர் செய்துள்ளனர்.

இந்த நிலையில் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக சகோதரர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.

அடித்துக்கொலை

நேற்று காலையில் நம்பிராஜன், ஆறுமுகவேல் ஆகிய இருவருக்கும் இடையே தங்களது வயலில் தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த நம்பிராஜன், ஆறுமுகவேலை அரிவாளால் வெட்டினார்.

இதில் படுகாயம் அடைந்த ஆறுமுகவேல் அருகில் கிடந்த மண்வெட்டியை எடுத்து, நம்பிராஜனை தலையில் தாக்கியதாக கூறப்படுகிறது. பலத்த காயம் அடைந்த நம்பிராஜன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

ஆஸ்பத்திரியில் அனுமதி

இதையடுத்து ஆறுமுகவேல் வள்ளியூர் போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்த சம்பவம் குறித்து கூறினார். அரிவாள் வெட்டில் காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக போலீஸ் பாதுகாப்புடன் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையே, வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். நம்பிராஜன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பரபரப்பு

இதுகுறித்து வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வயலில் தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட தகராறில் விவசாயியை அவரது தம்பி அடித்துக் கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story