Normal
செஞ்சி அருகே கிணற்றில் விவசாயி பிணம் போலீஸ் விசாரணை
செஞ்சி அருகே கிணற்றில் விவசாயி பிணமாக மிதந்தாா். இது குறித்து போலீசாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
விழுப்புரம்
செஞ்சி,
செஞ்சியை அடுத்த பெரும்புகையில் விவசாயி ஒருவரது கிணற்றில் 45 வயதுடைய ஆண் பிணம் ஒன்று மிதந்தது. இதுபற்றி தகவல் அறிந்த செஞ்சி போலீசார், தீயணைப்பு வீரர்கள் உதவியுடன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இறந்தவர் குறித்து விசாரித்த போது, அவர், மேல் களவாயை சேர்ந்த விவசாயி தனபால் (வயது 45) என்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story