விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

கீரனூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

கீரனூர் அருகே உள்ள வேளாங்குடிபட்டியை சேர்ந்தவர் தங்கமணி (வயது 65), விவசாயி. இவர் தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தார். இந்தநிலையில் நேற்று வீட்டின் அருகே இருந்த கழிவறைக்குள் சென்றவர் வயலுக்கு அடிக்கும் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து மயங்கி கிடந்து உள்ளார். இதனைக் கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி தங்கமணி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கீரனூர் சப்- இன்ஸ்பெக்டர் மரியதாஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story