விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

அன்னவாசல்:

அன்னவாசல் அருகே கிளிக்குடி எல்லைப்பட்டியை சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 55). விவசாயி. இவருக்கு தீராத வயிற்றுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. பல்வேறு மருத்துவமனைகளில் காண்பித்து சிகிச்சை பெற்று வந்தார். மேலும் வயிற்று வலியால் அவதியடைந்து வந்த ராஜேந்திரன் வயலுக்கு தெளிக்க வைத்திருந்த பூச்சி மருந்தை (விஷம்) குடித்துள்ளார். இதையடுத்து அவரை வீட்டில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story