விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

வேளாங்கண்ணி அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்துகொண்டார்

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

நாகப்பட்டினம் அருகே உள்ள செல்லூர் பி.எஸ்.ஆர். தெருவை சேர்ந்தவர் வீரமணி (வயது 57). விவசாயி. இவர் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் ஆஸ்பத்திரிக்கு சென்று வருவதாக வீட்டில் உள்ளவர்களிடம் கூறிவிட்டு வேளாங்கண்ணிக்கு வந்தார். பின்னர் அவர் விஷத்தை குடித்து விட்டு கோவில் அருகே மயங்கி விழுந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது குறித்து வேளாங்கண்ணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story