விஷம் குடித்து விவசாயி தற்கொலை
விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
புதுக்கோட்டை
ஆலங்குடி அருகே கும்மங்குளத்தை சேர்ந்தவர் ஜெஸ்டின்ஜெயராஜ் (வயது 45). விவசாயி. இவரது மனைவி நட்சத்திரமேரி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று ஜெஸ்டின்ஜெயராஜ் வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை (விஷம்) குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதைப்பார்த்த அவரது உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெஸ்டின் ஜெயராஜ் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் ஆலங்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Related Tags :
Next Story