விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x
தினத்தந்தி 23 Jan 2023 12:15 AM IST (Updated: 23 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon

போடியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

தேனி

போடி ஜக்கநாயக்கன்பட்டியைச் சேர்ந்தவர் வனராஜ் (வயது 53). விவசாயி. இவரது மனைவி உடல் நிலை சரியில்லாமல் இருந்தார். இதனால் அவரது மகன் நாகராஜ் வெளியூரில் தான் பார்த்த வேலையை விட்டு விட்டு போடிக்கு வந்து தனது தாயை கவனித்து வந்தார். இதற்கிடையே மகன் வேலையை இழந்ததால் வனராஜ் மன உளைச்சலில் இருந்து வந்தார். இந்நிலையில் வனராஜ் பூச்சி மருந்தை (விஷம்) குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதைக்கண்ட அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story