விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

காரியாபட்டி,

நரிக்குடி அருகே உலக்குடி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 58). விவசாயியான இவர் தொடர்ந்து வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் சுப்பிரமணி விஷம் குடித்தார். உடனே அவரை மீட்டு திருச்சுழி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியில் அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து நரிக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story