விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

உப்பிலியபுரத்தை அடுத்த பச்சபெருமாள்பட்டி ஊராட்சி தங்கநகர் காட்டுக்கொட்டகையச் சேர்ந்தவர் சரவணன் (வயது 39). விவசாயியான இவருக்கு ரூபதி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனம் உடைந்த சரவணன் களைக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story