காதலை கைவிட மகள் மறுத்ததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை
காதலை கைவிட மகள் மறுத்ததால் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
வேலூர்
கணியம்பாடியை அடுத்த கம்மசமுத்திரம் அருகே உள்ள அருணகிரிபேட்டையை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 48), விவசாயி. இவரது மகள் அதே பகுதியை சேர்ந்த உறவினர் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இந்த காதலுக்கு ஏழுமலை எதிர்ப்பு தெரிவித்தாராம். ஆனால், காதலித்தவரைத்தான் திருமணம் செய்துக்கொள்வேன் என மகள் பிடிவாதமாக கூறியுள்ளார்.
விரக்தியடைந்த ஏழுமலை கடந்த 3-ந் தேதி இரவு வீட்டில் வைத்திருந்த விஷ மருந்தை குடித்து விட்டார். மயங்கி விழுந்து கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக வேலுார் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஏழுமலை இறந்து விட்டார். இது குறித்து, வேலூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story