விஷம் குடித்து விவசாயி தற்கொலை


விஷம் குடித்து விவசாயி தற்கொலை
x

விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

புதுக்கோட்டை

ஆலங்குடி அருகே உள்ள கொத்தகோட்டை கல்யாணிபுரத்தை சேர்ந்தவர் ரெங்கசாமி (வயது 60), விவசாயி. இவர் கடந்த 2 ஆண்டுகளாக தீராத வயிற்றுவலியால் அவதியடைந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் விஷம் குடித்து வீட்டில் மயங்கி கிடந்தார். இதையடுத்து அவரை குடும்பத்தினர் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி ரெங்கசாமி நேற்று பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து ஆலங்குடி சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story