விவசாயி, தூக்குப்போட்டு தற்கொலை


விவசாயி, தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கடலூர் அருகே விவசாயி, தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கடலூர்

கடலூர் மேற்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் இளங்கோவன் (வயது 45), விவசாயி. இவரது மனைவி சித்ரா. கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சித்ரா, இளங்கோவனை பிரிந்து பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். இதனால் தனியாக வசித்து வந்த இளங்கோவன் சம்பவத்தன்று, அதே பகுதியில் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story