விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை


விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை
x

விவசாயி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருச்சி

தொட்டியத்தை அடுத்த வரதராஜபுரத்தை சேர்ந்தவர் ராஜசேகரன் (44). விவசாயியான இவர் அடிக்கடி மது குடித்ததால், குடல் புண் ஏற்பட்டு அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றும் சரியாகாத நிலையில், அவர் மன உளைச்சலில் இருந்ததாக தெரிகிறது. இதையடுத்து ராஜசேகர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சேலையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மனைவி மணிமேகலை(40) கொடுத்த புகாரின்பேரில் தொட்டியம் போலீசார் வழக்குப்பதிவு செய்த விசாரணை மேற்கொண்டனர்.


Next Story