தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை


தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
x

தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

விருதுநகர்

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே ஆத்திபட்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் சிவா (வயது 33). விவசாயியான இவருக்கு மாரிச்செல்வி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். கடந்த சில நாட்களாக சிவாவிற்கு உடல்நிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிவாவின் உடலை மீட்டு பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து மாரிச்செல்வி கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Next Story