தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
குடும்பம் நடத்த மனைவி வராததால் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
அரியலூர்
அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் மாத்தாயி தெருவை சேர்ந்தவர் குருநாதன் (வயது 47), விவசாயி. இவருக்கு அன்னக்கிளி என்ற மனைவியும், ராஜா என்ற மகனும் உள்ளனர். இந்தநிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட குடும்பத்தகராறு காரணமாக அன்னக்கிளி கழுமங்கலம் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார். இதையடுத்து, குருநாதன் தனது மனைவியை குடும்பம் நடத்த பலமுறை அழைத்தும் அவர் மறுத்துள்ளார். இந்தநிலையில் நேற்று அன்னக்கிளியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்து உள்ளார். ஆனால் அவர் வர மறுத்ததால் மனமுடைந்த குருநாதன் வீட்டின் பின்புறம் உள்ள மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து உடையார்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story