மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை


மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை
x

கடலூர் அருகே செயலிழந்த கையை அகற்றியதால் மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

கடலூர்

இடது கை அகற்றம்

கடலூர் அருகே உள்ள கிழக்கு ராமாபுரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 38), விவசாயி. இவரது மனைவி சசிகலா (35). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த விபத்தில் வேல்முருகனின் இடது கை செயலிழந்ததால், அதனை அகற்றி விட்டனர்.

இதனால் அவர் மனமுடைந்த நிலையிலேயே காணப்பட்டார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது தோட்டத்திற்கு சென்ற வேல்முருகன், அங்கு மதுவில் விஷம் கலந்து குடித்து விட்டார்.

சாவு

இதில் மயங்கி கிடந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி வேல்முருகன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சசிகலா, திருப்பாதிரிப்புலியூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story