மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை
மதுவில் விஷம் கலந்து குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளக்குறிச்சி
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் அடுத்த கண்டாச்சிபுரம் அருகே நல்லாபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 65). விவசாயி. சம்பவத்தன்று இவர் அரகண்டநல்லூரில் உள்ள பச்சைவாழி அம்மன் கோவில் அருகே மதுவில் விஷத்தை கலந்து குடித்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் அரகண்டநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story