விவசாயி விஷம்குடித்து தற்கொலை


விவசாயி விஷம்குடித்து தற்கொலை
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:59 PM IST)
t-max-icont-min-icon

திருவேங்கடம் அருகே, விவசாயி விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

தென்காசி

திருேவங்கடம்:

திருவேங்கடம் அருகே, விவசாயி விஷம்குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

விவசாயி

தென்காசி மாவட்டம் திருவேங்கடம் தாலுகா வரகனூர் பஞ்சாயத்து வையக்கவுண்டம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் கற்பகராஜ் (வயது 56). விவசாயி.

இவருக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவி 6 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.

இரண்டாவது மனைவியான மாரியம்மாள் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் இவர் வசித்து வந்தார்.

கடன்

இந்தநிலையில் இரண்டாம் மனைவி மாரியம்மாளின் நகையை விவசாய செலவுக்காக அடமானம் வைத்திருந்தார். மேலும் சிலரிடம் கடன் வாங்கி இருந்தார். கற்பகராஜ் உடல் நலக்குறைவு காரணமாகவும், குடித்து விட்டும் வேலைக்கு செல்ல முடியாமல் வீட்டில் இருந்து வந்தார்.

இந்தநிலையில் அடகு வைத்த நகையை திருப்ப முடியவில்லையாம். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

தற்கொலை

சம்பவத்தன்று மீண்டும் மாரியம்மாளுக்கும், கற்பகராஜுக்கும் இடையே அடகு நகையை மீட்பது தொடர்பாக தகராறு ஏற்பட்டது. இதனால் மனவேதனை அடைந்த கற்பகராஜ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விவசாய பணிக்கு வைத்திருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். வீட்டுக்கு வந்த குடும்பத்தினர், அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே கற்பகராஜ் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து திருவேங்கடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story