டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற விவசாய தம்பதி கைது


டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற விவசாய தம்பதி கைது
x

டீசல் ஊற்றி தீக்குளிக்க முயன்ற விவசாய தம்பதி கைது செய்யப்பட்டனர்.

திருச்சி

திருச்சி:

தீக்குளிக்க முயற்சி

திருச்சி மாவட்டம் லால்குடி கூடலூர் பகுதியை சேர்ந்தவர் சிவனேசன். இவர் நேற்று தன்னுடைய மனைவி ரேவதி மற்றும் மகனுடன் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்தார். அப்போது திடீரென பையில் வைத்திருந்த பிளாஸ்க்கை எடுத்த தம்பதியினர், அதில் இருந்த டீசலை தலையில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அப்போது, அங்கு பணியில் இருந்த மாநகர நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஏட்டு பொன்னுசாமி, அவர்களின் கையில் இருந்த பிளாஸ்க்கை பறித்து, அவர்களை தடுத்து நிறுத்தினார். பின்னர் சிவனேசனின் உடலில் தண்ணீரை ஊற்றி ஆசுவாசப்படுத்தினர். இதையடுத்து அவர்களை போலீஸ் வேனில் ஏற்றி செசன்சு கோர்ட்டு போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

கைது

அங்கு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது லால்குடி கூடலூர் பகுதியில் விவசாயம் செய்து வரும் நாங்கள், எங்களுக்கு சொந்தமான இடத்தில் வசித்து வருகிறோம். அதன் அருகே நாங்கள் வழித்தடமாக பயன்படுத்தி வரும் இடத்தில், அரசு பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டுவதால் நாங்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலையில் உள்ளது. இதுபற்றி பலமுறை புகார் கொடுத்தும் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை.

இதனால் மனவேதனையில் இருந்த நான் இன்று குடும்பத்தோடு திருச்சி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டேன் என்று சிவனேசன் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து தற்கொலைக்கு முயன்றதாக அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


Next Story