மின்னல் தாக்கி விவசாயி சாவு


மின்னல் தாக்கி விவசாயி சாவு
x

மின்னல் தாக்கி விவசாயி உயிரிழந்தார்.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் பகுதியில் கடந்த சில தினங்களாக அதிகமாக வெயில் அடித்து வந்தது. நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. பிறகு மாலை இரண்டு மணி நேரம் இடி, மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இந்நிலையில் கீழராங்கியன் காலனியை சேர்ந்த விவசாயி கரந்தமலை (வயது 54) என்பவர் வயல்வெளி பகுதியில் ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது மின்னல் தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து பழையனூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.


Next Story