லாரி- மோட்டார் சைக்கிள் மோதல்; விவசாயி சாவு
லாரி- மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் விவசாயி இறந்தார்.
திருவாரூர்
கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடி சம்மன்திடல் கீழத்தெருவை சேர்ந்தவர் சண்முகம் (வயது65). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மதியம் கூத்தாநல்லூர் அருகே உள்ள பாரதிமூலங்குடி சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த லாரியும், மோட்டார் சைக்கிளும் எதிர்பாராதவிதமாக மோதிக்கொண்டன. இதில் பலத்த காயம் அடைந்த சண்முகம் திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக இறந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த கூத்தாநல்லூர் போலீசார் லாரி டிரைவர் கொரடாச்சேரி கம்மன்கொல்லை தெருவை சேர்ந்த பாலாஜி (37) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story