வேப்பனப்பள்ளி அருகே மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு 2 பேர் படுகாயம்


வேப்பனப்பள்ளி அருகே மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி சாவு 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 21 Jun 2023 1:15 AM IST (Updated: 21 Jun 2023 4:00 PM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

வேப்பனப்பள்ளி

கிருஷ்ணகிரி மாவட்டம் கங்கோஜி கொத்தூர் பக்கமுள்ள தேவர்குந்தாணியை சேர்ந்தவர் மந்தப்பா (வயது 45). விவசாயி. இவர் அதேபகுதியை சேர்ந்த எலக்ட்ரீசியன் ரமேஷ் (32), கன்னியப்பன் (36) ஆகியோருடன் மோட்டார்சைக்கிளில் தங்காடிகுப்பம் பக்கமாக சென்று கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மோட்டார்சைக்கிள் அந்த வழியாக சென்ற மாட்டு வண்டி மீது மோதியது. இதில் மந்தப்பா சம்பவ இடத்திலேயே இறந்தார். ரமேஷ், கன்னியப்பன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து வேப்பனப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story