மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பலி
மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி விவசாயி பலி
தஞ்சாவூர்
வல்லம்:
தஞ்சையை அடுத்துள்ள செங்கிப்பட்டி அருகே பழைய கரியப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ஜெயபாலன் (வயது58). விவசாயி. இவர் சாணூரப்பட்டி அருகே கரியப்பட்டி சர்வீஸ் சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே வேலூர் மாவட்டம் காட்பாடி கல்புதூர் பகுதியை சேர்ந்த லோகநாதன் என்பவர் ஓட்டி வந்த கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு ஜெயபாலன் படுகாயம் அடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஜெயபாலன் பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்த புகாரின் பேரில் செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story