விவசாயி குடும்பத்தினர் விஷ பாட்டிலுடன் தர்ணா


விவசாயி குடும்பத்தினர் விஷ பாட்டிலுடன் தர்ணா
x
தினத்தந்தி 20 Sept 2022 12:30 AM IST (Updated: 20 Sept 2022 12:30 AM IST)
t-max-icont-min-icon

விவசாயி குடும்பத்தினர் விஷ பாட்டிலுடன் தர்ணாவில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்

பழனி அருகே உள்ள பழைய ஆயக்குடி பகுதியை சேர்ந்தவர் கணபதி. விவசாயி. நேற்று இவர் தனது குடும்பத்துடன் பழனி சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார். அவர்களின் கையில் விஷ பாட்டில் இருந்தது. பின்னர் அவர்கள் சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த வருவாய்த்துறை அதிகாரிகள், டவுன் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

பின்னர் கணபதியிடம் இருந்த விஷ பாட்டிலை பிடுங்கி, அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, எனது தோட்டத்தில் மண் எடுப்பதை சிலர் தடுத்து மிரட்டுவதாகவும், மண் எடுக்க அனுமதிக்க வேண்டும் என்றும் கோரி அதிகாரிகளிடம் கணபதி மனு ஒன்றை கொடுத்தார். பின்னர் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.


Next Story