நிலத்தகராறில் விவசாயி வெட்டிக்கொலை


நிலத்தகராறில் விவசாயி வெட்டிக்கொலை
x
தினத்தந்தி 7 Dec 2022 11:22 PM IST (Updated: 8 Dec 2022 5:41 PM IST)
t-max-icont-min-icon

அரக்கோணம் அருகே நிலத்தகராறில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினரான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை

அரக்கோணம் அருகே நிலத்தகராறில் விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவரது உறவினரான வாலிபரை போலீசார் தேடி வருகின்றனர்.

விவசாயி வெட்டிக்கொலை

அரக்கோணம் அடுத்த நாரணமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் ஜோதி (வயது 50). விவசாயம் செய்து வந்தார். இவருக்கும் இவரது சகோதரி மகன் அஜித் (22) என்பவருக்கும் ஏற்கனவே நிலம் சம்பந்தமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும், இது சம்பந்தமாக ஜோதி மீது அரக்கோணம் தாலுகா போலீஸ் நிலையத்தில் வழக்கு இருப்பதாகவும் தெரிகிறது.

இதன் காரணமாக ஜோதியை பழிவாங்கும் எண்ணத்தில் அஜித் இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று மாலை ஜோதி வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளார். அப்போது அவரை அஜித் வெட்டி கொலைசெய்துள்ளார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார்.

வாலிபருக்கு வலைவீச்சு

இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று ஜோதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து தலை மறைவான அஜித்தை வலை வீசி தேடி வருகின்றனர்.

சொத்திற்காக மாமா என்று கூட பார்க்காமல் வெட்டி கொன்ற சம்பவம் கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story