காட்டுப்பன்றி தாக்கி விவசாயி படுகாயம்
காட்டுப்பன்றி தாக்கி விவசாயி படுகாயம்
நீலகிரி
பந்தலூர்
பந்தலூர் அருகே மேங்கோரேஞ்ச் பகுதியை சேர்ந்தவர் இந்திரஜித் (வயது 52). விவசாயி. கூவமூலாவில் தேயிலை தோட்டத்தை குத்தகைக்கு வாங்கி உள்ளார். அந்த தேயிலை தோட்டத்தில் நேற்று வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது மறைந்திருந்த காட்டுப்பன்றி அவரை திடீரென தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் சத்தம் போட்டு கத்தினார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு ஓடோடி வந்து, காட்டுப்பன்றியை விரட்டினார்கள். பின்னர் படுகாயம் அடைந்த இந்திரஜித்தை மீட்டு சிகிச்சைக்காக பந்தலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுறித்து தேவாலா வனச்சரகர் சஞ்சீவி, வருவாய் ஆய்வாளர் லட்சுமிசங்கர் கிராம நிர்வாக அலுவலர் கர்ணன், வனகாப்பாளர் அருண்குமார் மற்றும் வனத்துறையினர் ஆஸ்பத்திரிக்கு சென்று இந்திரஜித்துக்கு ஆறுதல் கூறினர்.
Related Tags :
Next Story