மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி படுகாயம்


மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி படுகாயம்
x

மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி படுகாயம் அடைந்தனர்.

கரூர்

தரகம்பட்டி

கடவூர் வட்டம், லெறியாம்பட்டியை சேர்ந்தவர் மாணிக்கம் (வயது 60). விவசாயி. இவர் சொந்த வேலை நிமித்தமாக தனது மோட்டார் சைக்கிளில் தரகம்பட்டிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சென்னம்பட்டியை சேர்ந்த சுரேந்தர் என்பவர் ஓட்டி வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், மாணிக்கம் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த மாணிக்கம் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்த புகாரின்பேரில் சிந்தாமணிப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Next Story