மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி
x

விழுப்புரம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த விவசாயி பலி சாலையின் குறுக்கே நாய் வந்ததால் விபரீதம்

விழுப்புரம்

செஞ்சி

விழுப்புரம் அருகே உள்ள கக்கனூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார்(வயது 43). விவசாயியான இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் வரிக்கல் கிராமத்தில் உள்ள தனது மாமியார் வீட்டுக்கு சென்று விட்டு பின்னர் அங்கிருந்து மீண்டும் கக்கனூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். பணமலைப்பேட்டை அருகே வந்தபோது திடீரென நாய் ஒன்று சாலையின் குறுக்கே வந்ததால் சிவகுமார் நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்தார்.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சிவக்குமார் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து அவரது மகன் அரவிந்த் கொடுத்த புகாரின்பேரில் அனந்தபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story