கார் மோதி விவசாயி பலி
கன்னிவாடி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் விவசாயி பலியானார்.
கன்னிவாடியை சேர்ந்தவர் ராஜசேகரன் (வயது 40). பண்ணைப்பட்டியை சேர்ந்தவர் பிரவீன் (40). விவசாயி. நேற்று இவர்கள் இருவரும் திண்டுக்கல்லில் இருந்து மோட்டார்சைக்கிளில் பண்ணைப்பட்டிக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார்சைக்கிளை ராஜசேகரன் ஓட்டினார். பின்னால் பிரவீன் அமர்ந்திருந்தார். தி்ண்டுக்கல்-பழனி சாலையில் மாங்கரை பிரிவு அருகே வந்தபோது, பின்னால் வந்த கார் இவா்களது மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரவீன் பரிதாபமாக இறந்தார். ராஜசேகரனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து ரெட்டியார்சத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரவணகுமார், காரை ஓட்டி வந்த திண்டுக்கல் முத்தழகுபட்டியை சேர்ந்த அந்தோணிசாமி (36) என்பவர் மீது வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.