டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதி விவசாயி பலி


டிராக்டர் மீது மோட்டார்சைக்கிள் மோதி விவசாயி பலி
x

டிராக்டர் மீது மோட்டாரசைக்கிள் மோதி விவசாயி பலியானார்.

திருவண்ணாமலை

சேத்துப்பட்டு

டிராக்டர் மீது மோட்டாரசைக்கிள் மோதி விவசாயி பலியானார்.

திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூரை அடுத்த நரியம்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் சேட்டு (வயது 41). விவசாயியான அவர் தனது மோட்டார்சைக்கிளில் கடுகனூர் கிராமத்துக்கு சென்று விட்டு, அங்கிருந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார்.

கடுகனூர் கிராமத்தில் சாலையில் ஒரு டிராக்டர் சென்று கொண்டிருந்தது. அந்த டிராக்டரை முந்திச்செல்ல முயன்றபோது, டிராக்டரின் பின்பக்கம் அவரின் மோட்டார்சைக்கிள் மீது மோதி கீழே விழுந்தார். அதில் பலத்த காயம் அடைந்த சேட்டு சம்பவ இடத்திலேயே பலியானார்.

விபத்து குறித்து அங்கிருந்தவர்கள் பெரணமல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அவரின் பிணத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தார். விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலும் விசாரித்து வருகிறார்கள். விபத்தில் பலியான சேட்டுவுக்கு பாரதி என்ற மனைவியும், ஒரு மகனும், மகளும் உள்ளனர்.


Next Story