ஸ்கூட்டர் மோதி விவசாயி பலி


ஸ்கூட்டர் மோதி விவசாயி பலி
x

ஸ்கூட்டர் மோதி விவசாயி பலி

தஞ்சாவூர்

தஞ்சையை அடுத்துள்ள வெண்டையம்பட்டியை சேர்ந்தவர் வீரையன் (வயது 65). விவசாயி. நேற்றுமுன்தினம் இவர் ஸ்கூட்டரில் தஞ்சை -திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் செங்கிப்பட்டி நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது சாலை நடுவே உள்ள தடுப்பில் எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் மோதியது. இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வீரையன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த செங்கிப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து வீரையனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து செங்கிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story