வேன் மோதி விவசாயி பலி


வேன் மோதி விவசாயி பலி
x
தினத்தந்தி 13 May 2023 12:30 AM IST (Updated: 13 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

எரியோடு அருகே வேன் மோதி விவசாயி ஒருவர் பலியானார்.

திண்டுக்கல்

எரியோடு அருகே உள்ள நல்லமநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் ஞானஜோதி (வயது 40). விவசாயி. இவர் நேற்று முன்தினம் உரம் வாங்குவதற்காக தனது மோட்டார் சைக்கிளில் எரியோட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது

எரியோடு - வேடசந்தூர் சாலையில் தனியார் மில் வேன், ேமாட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட ஞானஜோதி படுகாயம் அடைந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவகல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து எரியோடு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலையரசன் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவர் தனபால் (27) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Related Tags :
Next Story