விவசாயி தற்கொலை


விவசாயி தற்கொலை
x

கெங்கவல்லி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

சேலம்

கெங்கவல்லி:

கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சி நரிப்பாடிைய சேர்ந்தவர் சாமிக்கண்ணு (வயது 54). விவசாயி. இவர், தினமும் மது குடித்து விட்டு வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. இதனால் மனைவி மற்றும் குடும்பத்தினர் அவரை திட்டியதாக கூறப்படுகிறது. இதில் மனம் வேதனை அடைந்த சாமிக்கண்ணு, விவசாய தோட்டத்தில் வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து மயங்கி கிடந்தார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.


Next Story